தமிழ்நாடு

கோத்தகிரியில் குடியிருப்புகள் அருகே காட்டெருமைகள் நடமாட்டத்தால் பீதி

DIN

கோத்தகிரி நகரப் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள், தேயிலைத் தோட்டங்களில் நடமாடும் காட்டெருமைகளை வனப் பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம், கோத்தகிரி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள வியூ ஹில், மாரியப்பன் வீதி, காம்பாய் கடை, சேட் லைன் உள்ளிட்ட பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாள்களாக காட்டெருமைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. குடியிருப்பை ஒட்டியுள்ள தேயிலைத் தோட்டங்களில் தங்கும் காட்டெருமைகள், அவ்வப்போது குட்டிகளுடன் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகின்றன.
சில நாள்களுக்கு முன் இங்குள்ள குழந்தைகள் காப்பகம் அருகே மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமை தாக்கியதில் பசு மாடு உயிரிழந்தது. காட்டெருமைகளைக் கட்டுப்படுத்துவதற்காக, பசும் புல்வெளிகளுக்கு மருந்து தெளித்து கருகச் செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதியில் அசம்பாவிதம் நடப்பதற்கு முன் குடியிருப்புகளின் அருகில் திரியும் காட்டெருமைகளை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT