தமிழ்நாடு

ஜெயலலிதா மரணம்: தினகரன் சார்பில் ஆதாரங்கள் அடங்கிய 'பென் ட்ரைவ்'  விசாரணை ஆணையத்தில் ஒப்படைப்பு! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 'பென் ட்ரைவ்', டிடிவி தினகரன் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் செவ்வாயன்று ஒப்படைகப்பட்டது.

DIN

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆதாரங்கள் அடங்கிய 'பென் ட்ரைவ்', டிடிவி தினகரன் சார்பில் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் செவ்வாயன்று ஒப்படைகப்பட்டது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில், ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணை ஆணையமானது மருத்துவர் பாலாஜி, தீபா உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

முன்னதாக விசாரணை ஆணையம் சார்பில், நேரில் ஆஜராகி தன் வசமுள்ள ஆதாரங்களை அளிக்குமாறு டிடிவி தினகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

அதன் பொருட்டு  டிடிவி தினகரன் வசம் உள்ள விடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்ட 'பென் ட்ரைவ்' ஒன்றை, அவரது சார்பில் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செவ்வாயன்று ஆணையத்தில் நேரில் ஆஜராகி சமர்ப்பித்தார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT