தமிழ்நாடு

பெண் மாவோயிஸ்ட்டுகளுக்கு காவல் நீட்டிப்பு

DIN

கரூர் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட பெண் மாவோயிஸ்ட்கள் கலா, சந்திரா மற்றும் வழக்குரைஞர் முருகனுக்கு ஜன. 22 வரை காவல் நீட்டிக்கப்பட்டது.
கரூர் வெங்கமேடு கணக்குப்பிள்ளைத் தெருவில் பதுங்கியிருந்த சேலம் மாவட்டம், தீவட்டிப்பட்டியைச் சேர்ந்த பெண் மாவோயிஸ்ட்கள் கலா (53), சந்திரா (46) ஆகிய இருவரையும் க்யூ பிராஞ்ச் பிரிவு போலீஸார் கடந்த 2016-ல் கைது செய்து திருச்சி பெண்கள் சிறையில் அடைத்தனர். 
இந்த மாவோயிஸ்ட்களுக்கு உதவியதாக மதுரை மாவட்டம், ஆலங்குளம் அன்புநகரைச் சேர்ந்த வழக்குரைஞர் முருகனை (35) கடந்தாண்டு கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதன்கிழமை மூவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 
வழக்கை விசாரித்த நீதிபதி மூவருக்கும் ஜன. 22 வரை காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

SCROLL FOR NEXT