தமிழ்நாடு

விரைவில் அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள், தொலைக்காட்சி உதயம்! 

அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.

DIN

சென்னை: அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளதாக அதிமுகவினை வழி நடத்தும் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான பழனிசாமி தெரிவித்தார்.

அதிமுக எம்.எள்.ஏக்களின் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் அதிமுகவினை வழி நடத்தும் குழு ஒருங்கிணைப்பாளர்களான முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியின் பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது:

அதிமுகவுக்கு என தனியாக செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி விரைவில் உதயமாக உள்ளது. அதற்கான அடிப்படைப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இவ்வாறு முதல்வர் தெரிவித்தார்.  

ஜெயா டிவி மற்றும் நமது எம்ஜிஆர் நாளிதழ் ஆகிய இரண்டும் தற்பொழுது டிடிவி தினகரன் வசம் உள்ளதால் அதிமுகவுக்கென தனியாக ஒரு செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி துவங்க வேண்டிய கட்டாயத்துக்கு முதல்வர் தரப்பு தள்ளப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மத்திய மேல்நிலைக்கல்வி வாரியத்தில் வேலை வேண்டுமா?: உடனே விண்ணப்பிக்கவும்!

தலைசிறந்த கலைஞன்... கமல் குறித்து அனுபம் கெர் நெகிழ்ச்சி!

தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானது!

பி.ஆர்.பாண்டியனின் தண்டனை நிறுத்திவைப்பு

SCROLL FOR NEXT