தமிழ்நாடு

நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம்: அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம்! 

DIN

சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என அரசுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் ஆட்சியை விட்டுப் போகலாம் என சிஐடியூவின் சவுந்தரராஜன், தொமுசவின் சன்முகம் இருவரும் கூட்டாக அறிவித்தனர். இது தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டையில் அவர்கள் இருவரும் கூட்டாக செய்தியார்களிடம் கூறியதாவது:

எங்கள் பிரச்சனை தீரும்வரை போராட்டம் தொடரும். அரசின் நடவடிக்கைகளுக்கு அஞ்ச மாட்டோம்.  நீதிமன்றத்திலிருந்து எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை. எங்களது தரப்பை கேட்காமலே பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவானது இயற்கை நீதிக்கு எதிரானது.  அப்படியே உத்தரவு வந்தாலும் திங்களன்று  உயர்நீதிமன்றத்தில் எங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைத்து வாதாடுவோம்.

போக்குவரத்து கழங்கங்கள் நிதி நெருக்கடியில் இருப்பதாக தொடர்ந்து கூறுகிறார்கள். போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதியத்துக்கு நிதி வசதியை ஏற்படுத்த முடியாவிட்டால் இந்த அரசு ஆட்சியை விட்டுப் போகலாம்

பொதுமக்களின் சிரமங்களுக்கு நாங்களும் வருந்துகிறோம். தவிர்க்கவியலா இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அரசுதான் காரணம்; நாங்கள் அல்ல கோரிக்கைகள் நிறைவேறும் வரை பொறுமையாக காத்திருக்கிறோம். எது வந்தாலும் சட்ட ரீதியாக சந்திப்போம்.

இவ்வாறு அவர்கள் இருவரும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT