தமிழ்நாடு

கிடப்பிலுள்ள சந்தன மரங்களை ஏலம் விட ஒப்பந்தம்: அமைச்சர் தகவல்

DIN

கிடப்பிலுள்ள சந்தன மரங்களை ஏலம் விட உலகளாவிய ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்படும் என்று வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, திமுக எம்.எல்.ஏ. கு.பிச்சாண்டி, "சந்தன மரங்களை விற்று அரசுக்கு வருமானம் வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமா' என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு அமைச்சர் சீனிவாசன் அளித்த பதில்:}
நீண்டகாலமாக இருக்கின்ற சந்தன மரங்களை உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் மூலமாக ஏலம் விடுவதற்குரிய சூழ்நிலை உருவாக்கப்படும். அதன்மூலமாக அரசுக்கு வருவாய் வரக்கூடிய செயலை வனத் துறை மேற்கொண்டிருக்கிறது. விரைவில் அதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றார் அமைச்சர் சீனிவாசன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT