தமிழ்நாடு

இன்று 4, 657 பேருந்துகள் இயக்கம்

DIN

பொங்கல் பண்டிகைக்காக சென்னையிலிருந்து சனிக்கிழமை (ஜன.13) 2,382 சிறப்புப் பேருந்துகள் உள்பட 4,657 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல 5,158 சிறப்புப் பேருந்துகள் உள்பட 11,983 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை வரை பலருக்கு அலுவல் இருக்கும் என்பதாலும், பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் சனிக்கிழமை மாலை வரை இயங்கும் என்பதாலும், இந்நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் பயண வசதியை கருத்தில் கொண்டு இந்தப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக வியாழன், வெள்ளிக்கிழமைகளில் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செல்ல இயலாதோரும் சனிக்கிழமை பயணம் மேற்கொள்வார்கள் என்பதால், பயணிகளின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளையும் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர். 
இப்பேருந்துகள் அனைத்தும் கோயம்பேடு, அண்ணா நகர், சைதாப்பேட்டை, தாம்பரம் சானடோரியம், பூவிருந்தவல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. 
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு ஆய்வு மேற்கொண்டார். பொங்கல் பண்டிகைக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் கடந்த இரு நாள்களில் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT