தமிழ்நாடு

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையிலான முரணை சரி செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்

DIN

உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முரணை சரி செய்ய வேண்டும் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் திமுக சார்பில் சனிக்கிழமை சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, வெல்லம் உள்ளிட்ட மளிகைப் பொருள்கள், வேட்டி, சேலைகள், குடைகள் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியது: தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதாக திமுக தலைவர் கருணாநிதி சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினார். ஆனால், அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நீக்கிவிட்டனர். விரைவில் திமுக ஆட்சி வந்தவுடன், பொங்கல் திருநாள் தமிழ்ப் புத்தாண்டாக மீண்டும் கடைப்பிடிக்கப்படும்.
போகி என்றால் பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற நிலையில், வீட்டிலிருக்கும் பழையனவற்றை மட்டுமல்ல, இந்த நாட்டிலிருக்கும் பழையனவற்றையும் அப்புறப்படுத்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு, சுமார் 20 ஆண்டுகள் பின்தங்கி, மோசமான நிலையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்துக்கு, தை பிறந்தால் நல்ல விடிவு காலம் பிறக்கும் என்ற நம்பிக்கை உருவாகி இருக்கிறது.
குமரிமுனை முதல் காஷ்மீர் வரையிலும் வசிக்கும் மக்களின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் மிகப்பெரிய இடத்தில் உச்சநீதிமன்றம் உள்ளது. அப்படிப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடையே பல முரண் ஏற்பட்டுள்ளது. அவற்றை உடனடியாகச் சரி செய்ய வேண்டும். நீதிபதிகளால் அதைத் தீர்க்க முடியாத நிலை வந்தால், குடியரசுத் தலைவர் அதில் தலையிட்டு, சரி செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால் பொங்கல் திருநாளில் தொண்டர்களை கருணாநிதி சந்திப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்கா அணி அறிவிப்பு

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அறிவியல் ஆயிரம்: பல் மருத்துவமும் நம்பமுடியாத வரலாற்று உண்மைகளும்!

போர் எதிர்ப்பு! கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள்...

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!

SCROLL FOR NEXT