தமிழ்நாடு

தமிழகத்தில் கூடுதலாக 125 துணை மின் நிலையங்கள்: அமைச்சர் பி. தங்கமணி

DIN

தமிழகத்தில் கூடுதலாக 125 துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
குமாரபாளையம் வட்டத்துக்குடேபட்ட வெப்படை அருகே உப்புபாளையத்தில் எரிசக்தி துறையின் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்தின் சார்பில் ரூ.8.96 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கும் பணி தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. 
இதில் பணியைத் தொடக்கிவைத்து பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியது: -
தமிழகத்தில் ஏற்கெனவே 1,566 துணை மின்நிலையங்கள் உள்ளன. நிகழாண்டில் கூடுதலாக 125 துணை மின் நிலையங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் விரைவில் 900 மின் உதவியாளர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்படவுள்ளன.
மின்மாற்றிகளை பொருத்தமட்டில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் காலதாமதமாகியது. தற்போது நீதிமன்றம் தடை ஆணையை நீக்கியுள்ளதால், மின்மாற்றிகள் கொள்முதல் செய்யும் பணி கடந்த வாரம் முதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக மின்மாற்றிகளின் பற்றாக்குறை விரைவில் சரி செய்யப்பட்டு விடும். 
தீனதயாள் உபாத்தியா கிராம் ஜோதி யோஜனா திட்டத்தின் மூலம் ரூ.963 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதில் 60 சதவீதம் மத்திய அரசின் மானியமாகவும், 30 சதவீதம் மாநில அரசின் மானியமாகவும், 10 சதவீதம் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகத்தின் பங்குத் தொகை என நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மின் விநியோகக் கட்டமைப்பு மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் 13,000 மெகா வாட் மின்உற்பத்தி நிலையம் அமைத்து மின்உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் தமிழகத்தில் மின் பற்றாக்குறை முற்றிலும் நீக்கப்பட்டு, தடையில்லா மின்சாரம் அனைவருக்கும் கிடைக்கும் நிலை உருவாகும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT