தமிழ்நாடு

சென்னைவாசிகளே.. இந்த கோடையில் குடிநீர் பஞ்சம் வராது! நம்பலாம்!!

2016ம் ஆண்டைப் போலவே 2017ம் ஆண்டும் தமிழகத்தை வடகிழக்குப் பருவ மழை ஏமாற்றினாலும், இப்போதிருக்கும் குடிநீரைக் கொண்டு கோடைக்காலத்தை சமாளித்து விடலாம் என்கிறது புள்ளி விவரம்.

DIN


சென்னை: 2016ம் ஆண்டைப் போலவே 2017ம் ஆண்டும் தமிழகத்தை வடகிழக்குப் பருவ மழை ஏமாற்றினாலும், இப்போதிருக்கும் குடிநீரைக் கொண்டு கோடைக்காலத்தை சமாளித்து விடலாம் என்கிறது புள்ளி விவரம்.

நெல்லை உள்ளிட்ட தென் தமிழக மாவட்டங்களைத் தவிர, 2017ம் ஆண்டு பருவ மழை பொய்த்துப் போனது. ஒரு சில மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக அதன் அக்கம் பக்கத்து மாவட்ட ஏரிகளும், நீர் ஆதாரங்களும் நிரம்பி, மக்களுக்கு ஓரளவுக்கு நம்பிக்கைத் தந்தன.

இந்த நிலையில், தற்போது சென்னையில் உள்ள நீர் ஆதாரங்களில் சேமிக்கப்பட்டிருக்கும் தண்ணீர், எத்தனை மாதங்கள் தாக்கு பிடிக்கும் என்பதை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் முருகேஷ் என்ற சமூக ஆர்வலர் கேட்டிருந்தார்.

அதற்கு, சென்னை மாநகராட்சி சார்பில் அளிக்கப்பட்டிருக்கும் பதிலில், சென்னை மாநகராட்சிக்கு பூண்டி, சோழவரம், புழலேரி, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஆகிய ஆதாரங்களில் இருந்து நீர் எடுக்கப்படுகிறது.

குடிதண்ணீர் நீர்நிலை இருப்பு விவரம்
(மில்லியன் கன அடியில்)
பூண்டி 1070.00
சோழவரம் 495.00
புழலேரி 1522.00
செம்பரம்பாக்கம் 1810.00
வீராணம் 564.40 

இந்த ஏரிகளில் தற்போதிருக்கும் நீர் இருப்பு 30.09.2018ம் தேதி வரை சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் என்று பதிலளிக்கப்பட்டுள்ளது.

எனவே, சென்னையில் இந்த ஆண்டு கோடைக் காலத்தை குடிநீர் பஞ்சம் இல்லாமல் சந்திக்கலாம் என்கிறது இந்த தகவல். இதனால் மழை இல்லையே.. இந்த ஆண்டு கோடையை எப்படி சமாளிக்கப் போகிறோமோ என்று வருந்தியவர்கள் ஓரளவுக்கு நிம்மதி அடையலாம்.

இன்றைய நிலவரப்படி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மொத்த வார்டுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 1,110 மில்லியன் லிட்டர் நல்ல தண்ணீர் தேவைப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகா்பத்திகள் தயாரிக்க புதிய தர நிா்ணயம்: நுகா்வோா் நலனைக் காக்க அரசு நடவடிக்கை

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

முதல்வா் மீதான தாக்குதல் வழக்கு: குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்தது நீதிமன்றம்

ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள்!

பராமரிப்பு பணி: மேட்டூா் காவிரி பாலம் மூடல்

SCROLL FOR NEXT