தமிழ்நாடு

தனியார் பள்ளி மாணவர் மரணம்: தலைமை ஆசிரியர் கைது

DIN

சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே மாணவர் நரேந்தர் உயிரிழந்த சம்பவத்தில் உடற்கல்வி ஆசிரியர் ஜெய்சிங் கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியின் தலைமை ஆசிரியர் அருள்சாமியும் கைது செய்யப்பட்டார்.

திரு.வி.க.நகர் 17 -ஆவது தெருவைச் சேர்ந்த முரளி என்பவரின் மகன் நரேந்தர் (15). இவர் பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வந்தார். முரளி, புதன்கிழமை காலை வழக்கம்போல் தனது மகனை இருசக்கர வாகனத்தில் பள்ளியில் விட்டுச் சென்றார். இந்நிலையில் சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பின்னர், முரளியின் செல்லிடப்பேசிக்கு நரேந்தர் படிக்கும் பள்ளியில் இருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் பேசிய பள்ளி ஊழியர்கள், நரேந்தர் மயங்கி விழுந்துவிட்டதாகவும், அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் கூறினர். அங்கு மருத்துவர்கள், நரேந்தர் இறந்துவிட்டதாக தெரிவித்ததைக் கேட்டு முரளி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அவர் திரு.வி.க.நகர் காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார்.

அந்த புகாரில், 'தனது மகன் நரேந்தர் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக கூறி, அங்குள்ள ஒரு ஆசிரியர் 'டக்வாக்' என்ற தண்டனையை வழங்கியதாகவும், இதற்காக பள்ளி மைதானத்தில் நரேந்தர் உட்கார்ந்த நிலையில் குதித்து ஓடியபோது மயங்கி விழுந்ததாகவும் தெரிகிறது. 

நரேந்தர் இறப்புக்கு காரணமான ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், இன்று காலை மாணவரின் மரணத்துக்கு நீதி கேட்டு, உறவினர்களும், பள்ளி மாணவர்கள் சிலரும் பள்ளி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT