முகப்பு
தமிழ்நாடு

ஊதிய உயர்வு வேண்டாம்: சட்டப்பேரவை செயலாளருக்கு டிடிவி தினகரன் கடிதம்! 

சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:03 PM
பகிர்:

சென்னை  சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார்.

சமீபத்தில் தமிழக எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.1.05 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் முதல்வர் பழனிச்சாமி இதற்கான அறிவிப்பினை வெளியிட்டார்.

பயணப்படி உள்ளிட்ட இதர படிகள் உயர்த்தப்பட்டுள்ளதால் அவர்களின் சம்பளம் இருமடங்காக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த சம்பள உயர்வானது ஜூலை 1-ம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும்.

எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு தொடர்பான மசோதா முதன்முதலில் தாக்கல் செய்யப்பட்ட பொழுதே திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் சமீபத்தில் உயர்த்தப்பட்டுள்ள ஊதிய உயர்வு தமக்கு வேண்டாம் என்று தமிழக சட்டப்பேரவை செயலாளரிடம் ஆர்.கே நகர் தொகுதி எம்எல்ஏ டி.டி.வி. தினகரன் கடிதம் அளித்துள்ளார். மேலும் அரசின் நிதி நிலைமை சீராக இல்லாத நிலையில் இந்த ஊதிய உயர்வு தேவையற்றது என்றும் அவர் தனது கடிதத்தில் விளக்கமளித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →