தமிழ்நாடு

அரசு கலைப் போட்டிகள் பிப்.3-இல் தொடக்கம்

DIN

ஜவாஹர் சிறுவர் மன்றம் சார்பில், மாணவர்களுக்கான கலைப் போட்டிகள், சென்னையில் வரும் 3 மற்றும் 4-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இதுகுறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
தமிழக அரசின், கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு ஜவாஹர் சிறுவர் மன்றம் சார்பில், 5 முதல் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்காக, பரத நாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய நான்கு கலைகளில், மூன்று பிரிவுகளில் மாவட்ட அளவில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. 
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற மாணவர்களைக் கொண்டு, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படும். அந்தப் போட்டிகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்கான செலவை அரசு ஏற்கும்.
மாநில அளவில் பரதநாட்டியம், கிராமிய நடனம், குரலிசை, ஓவியம் ஆகிய நான்கு வகைக் கலைகளில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000, இரண்டாம் பரிசாக ரூ.7,500, மூன்றாம் பரிசாக ரூ.5,000 என மொத்தம் 24 மாணவர்களுக்கு ரூ.1,80,000-க்கு பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்படும். 
அந்த வகையில் முதல் கட்டமாக 5 முதல் 8 வயது வரை, 8 முதல் 12 வயது வரை, 12 முதல் 16 வயது வரை என்ற மூன்று வகைப் பிரிவுகளில் சென்னை மாவட்ட கலைப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. அதன்படி பிப்.3-ஆம் தேதி பரத நாட்டியம், கிராமிய நடனம், குரலிசை போட்டிகளும், பிப்.4-ஆம் தேதி ஓவியப் போட்டியும் சென்னை ராஜா அண்ணாமலைபுரம் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலையில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. 
இவற்றில் பங்கு பெற விரும்பும் மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விவரங்களுடன் பிறந்த தேதி சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-2819 2152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT