தமிழ்நாடு

பிப்.8-இல் சென்னையில் சிறுதானிய பேக்கரி பொருள் தயாரிப்பு பயிற்சி

DIN

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், சிறுதானிய பேக்கரி பொருள்கள் தயாரிப்பு பற்றிய ஒருநாள் பயிற்சி வகுப்பு பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கு கட்டணம் உண்டு.
அதேபோல் பிப்.7-ஆம் தேதி மாடியில் தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சியும் நடத்தப்படவுள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் தலைவர் எச்.கோபால் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை அண்ணா நகரில் செயல்படும் எங்கள் மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், மாடிதோட்டம் அமைத்தல் பற்றிய ஒருநாள் பயிற்சி பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுபோல, சிறுதானிய பேக்கரி பொருள்கள் தயாரிப்பு என்னும் ஒருநாள் பயிற்சி பிப்ரவரி 8-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இப்பயிற்சிகளுக்கு தனித்தனியாக கட்டணம் ரூ.600 செலுத்த வேண்டும்.
பயிற்சி வகுப்பு காலை 9.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறுகிறது. பயிற்சி பற்றிய குறிப்பேடு, கையேடு, மதிய உணவு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். இந்த பயிற்சியில் கலந்துக் கொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-26263484 என்ற தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியர் மற்றும் தலைவர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம், எண். யு-30, 10 -ஆவது தெரு, (ஜெயகோபால் கரோடியா பள்ளி பின்புறம்), அண்ணாநகர் என்ற முகவரில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT