தமிழ்நாடு

குடிமராமத்து பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்: தமிழக அரசு உத்தரவு 

ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 அதிகாரிகளை  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

DIN

சென்னை: ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 அதிகாரிகளை  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஏரிகளை புனரமைப்பு பணி மேற்கொள்ள தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக ரூ.100 கோடி செலவில் 1513 ஏரிகள் தொடர்பான புனரமைப்பு பணிகள்  மேற்கொள்ளப்பட்டது. இதன்தொடர்ச்சியாக தற்போது மொத்தம் 328.95 கோடி செலவில் 1511 ஏரிகள் புனரமைப்பு பணிக்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு தமிழக அரசு ஒப்புதல் அளித்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகள் தொடர்பான புனரமைப்பு பணிகளை முடிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுப்பணித்துறை பொறியாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் நடைபெறவுள்ள குடிமராமத்து பணிகளை கண்காணிக்க 7 அதிகாரிகளை  நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த கண்காணிப்பு குழுவில் ககன்தீப் சிங் பேடி, அமுதா, பவன்குமார் பன்சால் உட்பட ஏழு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமனம் செய்து, தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஞாயிறன்று ஆணை பிறப்பித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT