முகப்பு
தமிழ்நாடு

உதகையில் கடும் குளிர்

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகையில் மேகமூட்டத்துடன் தூறல் மழை பெய்து வருவதோடு கடும் குளிர் நிலவுகிறது.

Updated On : 10 ஜூலை, 2018 at 12:49 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

நீலகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாகத் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. உதகையில் மேகமூட்டத்துடன் தூறல் மழை பெய்து வருவதோடு கடும் குளிர் நிலவுகிறது.
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவ மழை தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பருவமழை காலத்தில் ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய அளவுக்கு அதிகமாகவே மழைநீர் கிடைத்துள்ளதாக மத்திய மண் மற்றும் நீர்வள ஆராய்ச்சி மையத்தினர் தெரிவித்திருந்தனர். 
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த வாரம் மழையின்றி இருந்த நிலையில் கடந்த 2 நாள்களாகப் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தையொட்டியுள்ள பகுதிகளிலும், மேல்பவானி, அவலாஞ்சி உள்ளிட்ட நீர்ப் பிடிப்புப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவில் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்துக்கான நீராதாரங்களில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
உதகையில் பலத்த மழை இல்லாவிட்டாலும் தூறல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும் மேக மூட்டத்துடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. கடும் மேக மூட்டமாக இருப்பதால் தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா மையங்களிலும், வனத் துறைக்குச் சொந்தமான இயற்கை சுற்றுலா மையங்களிலும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுகின்றன. 
மேலும், அரசினர் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா மையங்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மிகக் குறைவாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.