தமிழ்நாடு

8 வழிச் சாலை திட்டம் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம்: அன்புமணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி 

DIN

சென்னை: சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்டம் தொடர்பாக கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணிக்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

பல்வேறு தரப்பினரின் பலத்த ஏதிர்ப்புகளுக்குஇடையே சென்னை - சேலம் 8 வழிச் சாலை திட்ட ஆரம்ப கட்டப் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திட்டம் தொடர்பாக தருமபுரி மாவட்டம் அரூரில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி முடிவு செய்தார். அதற்காக காவல்துறையிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அன்புமணி வழக்கு தொடர்ந்தார்.இந்த மனுவானது செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது.  

மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட பின்னர் நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் கூறியதாவது:

பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்துவதற்கு எந்த அனுமதியும், தேவை இல்லை. இந்த விவகாரத்தில் காவல்துறை உரிய காரணங்கள் இன்றி அனுமதி மறுத்துள்ளது. எனவே கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேகமலை அருவிக்கு செல்லத் தடை

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT