தமிழ்நாடு

வடசென்னை அனல் மின் நிலைய கொதிகலன் குழாயில் பழுது: 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு 

DIN

வடசென்னை அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது மற்றும் ஆண்டு பராமரிப்புப் பணிகள் காரணமாக 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள அத்திப்பட்டில் வடசென்னை அனல் மின் நிலையம் அமைந்துள்ளது. இங்கு முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி என மொத்தம் 630 மெகாவாட் மின் உற்பத்தியும், இதேபோன்று இரண்டாம் நிலையில் உள்ள மின் உற்பத்தியில் உள்ள 2 அலகில் தலா 600 மெகாவாட் மின் உற்பத்தி என 1200 மெகாவாட் மின் உற்பத்தியும் செய்யப்பட்டு வருகிறது. 
இங்குள்ள 2-வது நிலையில் இருக்கும் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக 1-ஆவது நிலையில் உள்ள 2-வது அலகில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT