தமிழ்நாடு

அமைச்சரின் எம்எல்ஏ அலுவலகம் மீது கல்வீசியது தொடர்பாக மாணவர் கைது

DIN

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் எம்எல்ஏ அலுவலகம் மீது கல்வீசியது தொடர்பாக, பள்ளி மாணவர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் அருகே உள்ள விழுப்புரம் தொகுதி எம்எல்ஏ அலுவலகம் மீது திங்கள்கிழமை நள்ளிரவு மர்ம நபர் கல்வீசியதில் வலது பக்க ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இதுகுறித்து அமைச்சரின் உதவியாளர் தரணிதரன் விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
போலீஸார் ஆட்சியர் வளாகப் பகுதி, எம்எல்ஏ அலுவலகம் எதிரே உள்ள தனியார் கடையிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிப் பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர். அதில், எம்எல்ஏ அலுவலகத்தின் எதிரே தள்ளுவண்டிக் கடை உணவகத்தில் பணியாற்றி வந்த சாலாமேடைச் சேர்ந்த முருகனின் 14 வயது மகன் (அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்), திங்கள்கிழமை இரவு எம்எல்ஏ அலுவலகம் அருகே நடமாடியதும், அப்போது, சுவரின் மீது இருந்த தண்ணீர் பாட்டிலை விளையாட்டாக அவர் கல்லால் அடித்த போது, அது எம்எல்ஏ அலுவலக ஜன்னல் மீது பட்டு கண்ணாடி உடைந்ததும் தெரிய வந்தது. 
இதுகுறித்து அந்த சிறுவனையும், பெற்றோரையும் போலீஸார் புதன்கிழமை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தவறுக்கு வருத்தம் தெரிவித்தனராம். எனினும், அந்த சிறுவனை சிறார் நீதிக்குழுமத்தில் விசாரணைக்காக புதன்கிழமை ஆஜர்படுத்தியதாக தாலுகா போலீஸார் தெரிவித்தனர்.
போலீஸ் பாதுகாப்பு: கல்வீச்சு சம்பவத்தையடுத்து, விழுப்புரம் எம்எல்ஏ அலுவலக வாயில் பகுதியில் இரண்டு போலீஸார் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டனர். எம்எல்ஏ அலுவலகத்தில் உடைக்கப்பட்ட ஜன்னல் கண்ணாடிகள் அலுவலக ஊழியர்கள் மூலம் புதன்கிழமை சீரமைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகிரி அருகே விபத்தில் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு

மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோயிலில் நவசண்டி ஹோமம்

தண்ணீா் பற்றாக்குறை அதிகரிப்பு

ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம்

பல்லடம் பேருந்து நிலையக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு

SCROLL FOR NEXT