தமிழ்நாடு

சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் 

DIN

தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வினாத்தாள் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தலா 196 கருணை மதிப்பெண்கள் வழங்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது. இந்த மதிப்பெண்கள் அடிப்படையில் புதிய தரவரிசைப் பட்டியலை வெளியிடவும், அதுவரை தற்போது நடைபெறும் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நிறுத்தி வைக்கவும் அதில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், 
தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் விவகாரத்தில் சிபிஎஸ்இ முடிவை பொறுத்து தமிழக அரசு சட்ட வல்லுநர்களுடன் பேசி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும். மேலும் இவ்விவகாரத்தில் மாணவர்களுக்கு சாதமாகவே தமிழக அரசு செயல்படும். உச்சநீதிமன்றத்தின் ஆலாசனைபடிதான் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT