தமிழ்நாடு

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை

DIN

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 மணிநேரத்துக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் அம்பத்தூர், எழும்பூர், அண்ணாநகர், தியாகராயநகர், சைதாப்பேட்டை, கிண்டி, சேப்பாக்கம், ராயப்பேட்டை, வேளச்சேரி, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஜூலை 11-ஆம் தேதி மாலை சுமார் 2 மணிநேரங்களுக்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. மேலும், திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்கிறது.

இந்நிலையில், சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

தென்மேற்கு பருவமழை கேரளா மற்றும் கர்நாடகாவில் வலுவடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள வால்பாறை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக கனமழை பெய்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் வெப்பசலனம் காரணமாக அடுத்த இரு தினங்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் மாலை அல்லது இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT