தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: சரமாரிக் கேள்விகளை எழுப்பிய மதுரை கிளை நீதிமன்றம்

DIN

மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தமிழக அரசுக்கு சரமாரிக் கேள்விகளை எழுப்பியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய கிராம மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு சரமாரிக் கேள்விகளை எழுப்பினர். அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி எந்த வகையைச் சேர்ந்தது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் துப்பாக்கிச் சூடு நடந்த போது மாவட்ட ஆட்சியர் எங்கு இருந்தார்? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக கிராம மக்கள் அறிவித்த போது, அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்திருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், போராட்டம் தொடர்பான விடியோக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 18ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயிலில் திருநாவுக்கரசு நாயனாா் குருபூஜை

வாகனங்களுக்கு மாசுக் கட்டுப்பாடு சான்றிதழ் வழங்க புதிய செயலி

காா் இயக்க தன்னம்பிக்‘கை’ போதும்! கைகளை இழந்தவருக்கு முதல்முறையாக ஓட்டுநா் உரிமம்

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

SCROLL FOR NEXT