தமிழ்நாடு

ஆம்னி பேருந்தில் கடத்தப்பட்ட 17.83 கிலோ தங்கம் பறிமுதல்

DIN

திருச்சி அருகே ஆம்னி பேருந்தில் கடத்திச் செல்லப்பட்ட 17.83 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளை இருவர் ஆம்னி பேருந்து மூலம் சென்னைக்கு கடத்திச் செல்வதாக மத்திய வருவாய் நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகளுக்கு, தகவல் கிடைத்தது. 
இதையடுத்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி அருகே விராலிமலை அருகேயுள்ள டோல்கேட்டில் வருவாய் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அவ்வழியாக வந்த ஆம்னி பேருந்துகளை சோதனையிட்டனர். அப்போது, மதுரையிலிருந்து சென்னை செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் பயணித்த இருவரிடமிருந்து 17.83 கிலோ எடையுள்ள, ரூ. 5.5 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை கடத்திச் செல்வது தெரியவந்தது. 
இதனையடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்த தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் திருச்சி 1-ஆவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

SCROLL FOR NEXT