தமிழ்நாடு

நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்த கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள்: முதல்வருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

DIN

நீட் தேர்வு தொடர்பான மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவை அமல்படுத்த மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில், தவறாக மொழி பெயர்க்கப்பட்டு கேட்கப்பட்ட கேள்விகளுக்காக தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், தமிழில் நீட் தேர்வெழுதிய 24,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலன் அடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்படாமல் இருக்க... நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை அமல்படுத்தும்போது, ஏற்கெனவே மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ள தமிழில் நீட் தேர்வெழுதிய மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில், தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT