தமிழ்நாடு

முட்டை கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என்று கூறவில்லை: பொன்.ராதாகிருஷ்ணன்

DIN

தமிழகத்தில் முட்டை கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு தமிழகம் மொட்டை போடப்படுவதாக கூறியதாக பொன்.ராதாகிருஷ்ணன் விளக்கமளித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, 

கப்பல் போக்குவரத்து துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் முக்கிய பணிகள் குறித்த ஆய்வு நடைபெற்றது. நாடு முழுவதும் இருக்கும் 12 பெரிய துறைமுகப் பணிகள் குறித்த ஆய்வு பற்றி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் ஊழல் பெருகிவிட்டதாக அமித் ஷா கூறியதில் எந்தத் தவறும் இல்லை. ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக உள்ளது. அதுபோல தமிழகத்தில் அதிகரித்துள்ள பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும்.

முட்டை கொள்முதலில் ஊழல் நடைபெற்றுள்ளதாக நான் கூறவில்லை. தமிழகத்தில் முட்டை கொள்முதலில் ரூ.5 ஆயிரம் கோடி ஊழல் என்று செய்தியாளர்கள் கூறியதற்கு தமிழகம் மொட்டை போடப்படுகிறது என்று கூறினேன். தேர்தலுக்கு இன்னும் நேரம் உள்ளதால் கூட்டணி குறித்து இப்போது எதுவும் தெரிவிக்க முடியாது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT