தமிழ்நாடு

மரணமடைந்த பெண் செய்தியாளரின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி: முதல்வர் பழனிசாமி

DIN


சென்னை: சாலை விபத்தில் உயிரிழந்த பெண் செய்தியாளர் ஷாலினி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மாலை முரசு தொலைக்காட்சி செய்தியாளர் ஷாலினி 15.7.2018 அன்று நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானார் என்ற செய்தி அறிந்து முதல்வர் பழனிசாமி மிகுந்த வேதனை அடைந்தார்.

ஷாலினி மற்றும் நண்பர்கள் திண்டுக்கல்லில் இருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்த போது, மதுரை – திண்டுக்கல் ரோட்டில், பொட்டிகுளம் அருகே கார் நிலைதடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்ததில், காரில் பயணம் செய்த ஷாலினி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஷாலினி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், மாலை முரசு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ள முதல்வர் பழனிசாமி, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகக் கூறியுள்ளார்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த ஷாலினி அவர்களின் குடும்பத்திற்கு சிறப்பு நிகழ்வாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT