தமிழ்நாடு

அமைச்சர்கள் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை: புதுவை முதல்வர் வேதனை

DIN

புதுவையில் அமைச்சர்களின் உத்தரவை அதிகாரிகள் மதிப்பதில்லை என்று முதல்வர் வே.நாராயணசாமி வேதனை தெரிவித்தார்.
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு, புதுவை பள்ளிக் கல்வித் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாணவர் நாள் விழாவில், இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி அவர் பேசியதாவது:
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி செய்த 9 ஆண்டு காலம் தமிழகம் பொற்காலமாகத் திகழ்ந்தது. அவரது ஆட்சிக் காலத்தில் அணைகள், பள்ளிகள், தொழிற்சாலைகள் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டன. தன்னுடைய தாய் அவதிப்பட்ட நிலையிலும், தனது வீட்டுக்கு குடிநீர் இணைப்பை காமராஜர் அனுமதிக்கவில்லை. 
ஆனால், தற்போதைய காலத்திலுள்ள முதல்வர்கள், அமைச்சர்கள் வீடு வரை சிமென்ட் சாலைகள் போடக்கூடிய நிலைதான் உள்ளது. புதுவை மாநிலத்தில் 2018 - 2019-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் கல்வித் துறைக்கு ரூ.870 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களை ஒப்பிடுகையில் இது அதிகமாகும். அமைச்சர்களின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பார்கள் என்பது தமிழகத்தில் மட்டுமே சாத்தியம். புதுவையில் அமைச்சர்களின் உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை என்றார் நாராயணசாமி.
விழாவில், கடந்த கல்வியாண்டில் அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல்வர் நாராயணசாமி பரிசுகளை வழங்கினார்.
விழாவில், கல்வி அமைச்சர் இரா.கமலக்கண்ணன், கல்வித் துறைச் செயலர் அன்பரசு, பள்ளிக் கல்வி இயக்குநர் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!

SCROLL FOR NEXT