தமிழ்நாடு

பழைய வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே வழக்குகளைத் தொடுக்கலாம்: உயர் நீதிமன்றக் கிளை

DIN

மதுரை: வீட்டு வாடகை தொடர்பான வழக்குகளை பழைய வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே வழக்குகளைத் தொடுக்கலாம் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அறிவித்துள்ளது.

வீட்டு வாடகை தொடர்பான நான்கு வழக்குகளை மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகம் விசாரிக்காமல் திருப்பி அனுப்பியது தொடர்பான வழக்கு ஒன்று, மதுரை உயர் நீதிமன்றத் கிளையில் வியாழன் அன்று விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது வீட்டு வாடகை கட்டுப்பாடு தொடர்பாக புதிய சட்டமானது விரைவில் நடைமுறைக்கு வரவிருப்பதால், அதற்கு முன்னர் இந்த வழக்குகளை விசாரிக்க முடியாது என்று மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகத்தின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அப்பொழுது நீதிபதிகள் கூறியதாவது:

வீட்டு வாடகை தொடர்பான நான்கு வழக்குகளை மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகம் விசாரிக்காமல் திருப்பி அனுப்பியது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

புதிய சட்டம் அமலுக்கு வரும் வரை வீட்டு வாடகை தொடர்பான வழக்குகளை பழைய வாடகை கட்டுப்பாட்டுச் சட்டத்தின்படியே வழக்குகளைத் தொடுக்கலாம்.

இது தொடர்பாக மாநில பதிவுத்துறை அலுவலகமானது மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகங்களுக்கு சுற்றரிக்கை அனுப்ப வேண்டும்.

மாவட்ட வாடகை கட்டுப்பாட்டு அலுவலகங்கள் மற்றும் வாடகை கட்டுப்பாட்டுத் தீர்ப்பாயம் ஆகியவை இது தொடர்பான வழக்குகளை விசாரிக்கலாம்.

இவ்வாறு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானத்து தேவதை..... அஞ்சலி!

ஓராண்டில் 674 காப்புரிமங்கள்: மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் சாதனை!

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

SCROLL FOR NEXT