தமிழ்நாடு

மீனவர்கள் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டாம்

தினமணி

வங்கக் கடலின் ஆழமான பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் தென்மேற்கில் இருந்து பலமான காற்று வீசக்கூடும்.
 தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரத்தில் மீனவர்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், வடக்கு வங்கக் கடல் மற்றும் ஆழமான கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
 ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேக மூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மாலை, இரவில் இடிமேகம் உருவாகக்கூடும்.
 திருத்தணியில் 101 டிகிரி: திருத்தணியில் 101, மதுரை விமானநிலையம், பரங்கிபேட்டை, நாகை, கடலூர், தூத்துக்குடி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெப்பநிலை பதிவானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் ஒரு வாரத்துக்கு வெயில் அதிகரிக்கும்

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்?

பூண்டி ஏரியில் வேகமாக குறைந்து வரும் நீா்மட்டம்

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

SCROLL FOR NEXT