தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்வு: தமிழக அரசு
தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் தங்களுக்கான ஊதியத்தினை உயர்த்தக் கோரி பெரிய அளவிலான போராட்டம் ஒன்றை சென்னையில் நடத்தினர்.
இந்நிலையில் தமிழகத்தில் பணிபுரியும் தற்காலிக அரசு செவிலியர்களுக்கான ஊதியம் இருமடங்காக உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இதுதொடர்பாக தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் ரூ.7000 தொகுப்பூதியம் பெற்று பணியாற்றி வரும் தற்காலிக செவிலியர்களின் ஊதியமானது தற்பொழுது ரூ.14000 ஆக உயர்த்தப்படுகிறது.
இந்த ஊதிய உயர்வானது ஏப்ரல் 1, 2018 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்
இதன் மூலம் தமிழக அரசில் தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வரும் 12000 செவிலியர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.