தமிழ்நாடு

காவேரி மருத்துவமனையில் வெளி நோயாளிகளுக்கு அனுமதி மறுப்பு?

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை வரை வெளிநோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

ENS

காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து திங்கள்கிழமை வரை வெளிநோயாளிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கோபாலபுர இல்லத்தில் இருந்து சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி இரத்த அழுத்த குறைபாடு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதி அனுமதிக்கப்பட்டதை அடுத்து மருத்துவமனை வளாகம் வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்தனர். அரசியல் தலைவர்களும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து சென்ற வந்த வண்ணம் இருந்தனர்.

காவேரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் நோயாளிகளை சந்திக்க அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால், கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிநோயாளிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்று மருத்துவர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.  

கருணாநிதி கடந்த டிசம்பர் மாதம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதிக்கப்பட்டதில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT