தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை: நீதிபதி அருணா ஜெகதீசன் திங்களன்று துவக்கம் 

DIN

சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்க அறிவிக்கப்பட்டுள்ள நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை,  திங்களன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த மக்கள் போராட்டத்தில் காவல்துறையால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி அருணா ஜெகதீசனின் ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை,  திங்களன்று துவங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல்கட்டமாக திங்களன்று தூத்துக்குடி செல்லும் அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்திக்க உள்ளார். பின்னர் அங்கேயே மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

பின்னர் மாவட்ட தலைமை மருத்துவமனை செல்லும் அவர் அங்கு காயம்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களை சந்தித்து விசாரணை  நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் அவரது விசாரணை அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்படுமென்று தெரிகிறது

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT