தமிழ்நாடு

ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு

DIN

தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயிலில் வைக்கப்பட்டுள்ள ராஜராஜசோழன், லோகமாதேவி சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோயிலில் இருந்து கடந்த 60 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போய், குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள சாராபாய் பவுன்டேஷன் - காலிகோ அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சாவூா் பெரிய கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்பட்ட சிலைகளை காண அப்போதே நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

பெருவுடையார் சன்னதி வளாகத்தில் உள்ள அா்த்த மண்டபத்தில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்ட இச்சிலைகளுக்கு 24 மணிநேரமும் பாதுகாப்பு அளிக்க துப்பாக்கி ஏந்திய 6 போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கண்காணிப்புக் கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

இரு சிலைகளையும் வைத்து கம்பிக் கதவு போட்டிருப்பதால், அவற்றை பொதுமக்கள் காண முடிகிறது. இக்கோயிலுக்கு சிலைகள் வந்துள்ள தகவல் பரவியதால் சனிக்கிழமையும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இரு சிலைகளையும் பார்த்து வியந்த பொதுமக்கள் அவற்றை செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT