முகப்பு
தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிட வழக்கு: மீண்டும் விசாரணைக்கு ஏற்பு

சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம்

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சென்னை மெரீனா கடற்கரையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை மீண்டும் விசாரணைக்கு பட்டியலிட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு, சென்னை மெரீனா கடற்கரையில் நினைவிடம் கட்ட தடை விதிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் அவரது புகைப்படங்களை வைக்கவும், அரசு திட்டங்களுக்கு அவரது பெயரை வைக்கவும் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன், சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி ஏ.செல்வம் ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்குகள் கடந்த ஏப்ரல் 2 - ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 
இந்த நிலையில், இவ்வழக்குகளை மீண்டும் விசாரிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி பி.டி ஆஷா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுக்களை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள அனுமதியளித்து, வரும் 8 -ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட பதிவுத் துறைக்கு உத்தரவிட்டனர். 

முழு கட்டுரையைப் படிக்க →