தமிழ்நாடு

ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - முதல்வர் அறிவிப்பு

DIN

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று (செவ்வாய்கிழமை) முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார். விதி எண் 110-ன் கீழ் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பின்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் மக்காத பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தவும், தயாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அன்றாட தேவை பொருட்களான பால், எண்ணெய், மருத்துவம், தயிர் போன்றவற்றுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள் போன்ற பொருட்களை தயார் செய்யவும் பயன்படுத்தவும் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.  

இந்த அறிவிப்புக்கு வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்கன் கனமழை: 68 போ் உயிரிழப்பு

சென்னை போராட்டம் வீண்: பிளே ஆஃப்பில் பெங்களூரு

இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி

இறுதிச் சுற்றில் அலெக்ஸ் வெரேவ்-நிக்கோலஸ் ஜேரி மோதல்

கேரளத்தில் அதிபலத்த மழைக்கு வாய்ப்பு: சில மாவட்டங்களுக்கு ‘சிவப்பு’ எச்சரிக்கை

SCROLL FOR NEXT