முகப்பு
தமிழ்நாடு

சென்னை, திருத்தணியில் 104 டிகிரி வெயில்

சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது.

Updated On : 30 ஜனவரி, 2024 at 1:13 PM
பகிர்:

சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் செவ்வாய்க்கிழமை 104 டிகிரி வெயில் பதிவானது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியது: வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மயிலம், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, வேலூர் மாவட்டம் ஆம்பூர், சிவகங்கை மாவட்டம் ஆம்பூரில் தலா 30 மி.மீ. மழை பதிவாகியுள்ளது என்றார் அவர்.
5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் 5 இடங்களில் செவ்வாய்க்கிழமை வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக சென்னை மீனம்பாக்கம், திருத்தணியில் தலா 104 டிகிரி வெப்பநிலை பதிவானது. நுங்கம்பாக்கம், வேலூரில் தலா 103 டிகிரியும், திருச்சியில் 100 டிகிரியும் பதிவானது. மதுரை விமான நிலையத்தில் 98 டிகிரியும், கரூர் பரமத்தி, பாளையங்கோட்டை, நாமக்கல்லில் தலா 97 டிகிரியும் பதிவானது.

முழு கட்டுரையைப் படிக்க →