தமிழ்நாடு

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை விவகாரம்: தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம் 

பேரறிவாளன் உட்பட 7 பேரின் உடல் நலம், குடும்ப சூழ்நிலை உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

DIN

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்று வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறைத் தண்டனை பெற்று வருகின்றனர். 

இவர்களை விடுவிக்கக் கோரி தமிழ் அமைப்புகள் உள்ளிட்ட பல அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழக அரசு அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்தது. அது தொடர்பாக தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. 

இதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்குகள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த ஜனவரி மாதம் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்கும் முடிவு உள்ளதா இல்லையா என்பதை மத்திய அரசு 3 மாத காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

இந்நிலையில், இன்று மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு இதுதொடர்பாக கடிதம் அனுப்பியுள்ளது. அதில், தமிழக அரசு தண்டனை பெற்று 7 பேரின் உடல் நிலை, அவர்களது குடும்ப சூழல் மற்றும் அவர்கள் மீதுள்ள வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதிய வரலாற்று உச்சத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு!

ஆப்கானிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவில் 5.8 ஆகப் பதிவு!

எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சிக்கு இடம் தரக் கூடாது: கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

தியாகராஜன் குமாரராஜா - விஜய்சேதுபதி கூட்டணி..! ஜப்பானிலும் வெளியாகும் பாக்கெட் நாவல்!

DMK பொண்ணு, RSS பையன்; காதல் கதை! | இயக்குநர் Raju Murugan உடன் சிறப்பு நேர்காணல் | Dinamani Talkies

SCROLL FOR NEXT