தமிழ்நாடு

நீட் தேர்வு தற்கொலைகளை பயன்படுத்தி அரசியல் ஆதாயம் - உயர்நீதிமன்றம் கண்டனம்

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்யும் மாணவர்களை அரசியல்வாதிகள் அரசியலுக்கு பயன்படுத்துவதாக உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

DIN

நீட் தேர்வுக்கு எதிராக ஆரம்பம் முதலே தமிழகம் கருப்பு கொடி காட்டி வந்தது. இருப்பினும், கடந்த ஆண்டு நீட் தேர்வு நடைபெற்றது. இதில், தோல்வியடைந்ததை அடுத்து அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்தார். இந்த சம்பவம் தமிழகத்தை வருத்தத்தில் ஆழ்த்தியது. இதையடுத்து, தமிழக அரசு நீட் தேர்வை எதிர்கொள்ள மாணவர்களுக்கு உரிய பயிற்சியளிக்க வேண்டும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  

இதையடுத்து, நடப்பாண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்ததாக விழுப்புரத்தைச் சேர்ந்த பிரதீபா மற்றும் திருச்சியைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற 2 மாணவிகள் தற்கொலை செய்துகொண்டனர். 

இதை எதிர்த்து வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தமிழக அரசு சரியாக பின்பற்றாததால் தான் இந்த வருடமும் தற்கொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதனால், அரசு அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி அளிக்க வேண்டும்" என்று கூறிப்பட்டிருந்தது.

இந்த வழக்குக்கு சென்னை உயர்நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. 

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தமிழக அரசு சார்பில் பதிலளிக்க அவகாசம் கேட்டனர். அப்போது, வழக்கை விசாரித்து வந்த உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் கூறியதாவது,

"நீட் விவகாரத்தில் அரசை மட்டும் குறை கூற முடியாது. சமூகத்தில் இருக்கும் அனைவருமே மாணவர்களின் தற்கொலைக்கு பொறுப்பு. நீட் தேர்வால் தற்கொலை செய்யும் மாணவர்களை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் செய்கின்றனர். அரசியல்வாதிகள் தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு எந்த அறிவுரையும் வழங்காமல் தேர்வுக்கு பிறகு கண்ணீர் வடிப்பது தேவையற்றது. மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் வகையில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன என்பது குறித்து 2 வார காலத்தில் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

ஓவல் டெஸ்ட்டில் இதயங்களை வென்ற கிறிஸ் வோக்ஸ்!

தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!

SCROLL FOR NEXT