தமிழ்நாடு

தடைக்காலம் முடிந்து அதிக இறால் மீன்கள் சிக்கியதால் மகிழ்ச்சி

DIN

ராமேசுவரத்தில் 61 நாள்கள் தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களுக்கு படகு ஒன்றுக்கு ரூ.75 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரை இறால் மீன்கள் கிடைத்துள்ளதால் ஞாயிற்றுக்கிழமை கரை திரும்பிய மீனவர்கள் மகிழ்ச்சியடைந்தனர். 
ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்டப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து 1500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 6,500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனர். 
இந்நிலையில், ஆழ்கடலில் சுமார் 36 மணி நேரம் மீன்பிடித்த மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் கரைக்குத் திரும்பினர். இதில் சிறிய விசைப் படகுகளுக்கு 150 கிலோ, பெரிய விசைப் படகுகளுக்கு 300 கிலோ முதல் 350 கிலோ வரையில் இறால் மீன்கள் கிடைத்துள்ளன. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் இறால் மீனுக்கு ஏற்றுமதியாளர்கள் விலையை குறைக்காமல் உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
இறால் கிலோ ஒன்றுக்கு ரூ. 450 வரை விற்கப்படுகிறது. இதனால் படகு ஒன்றுக்கு ரூ. 75 ஆயிரம் முதல் ரூ. 1.50 லட்சம் வரையில் மீனவர்களுக்கு வருவாய் கிடைத்துள்ளது, மேலும் கணவாய், நண்டு உள்ளிட்ட பல்வேறு வகை மீன்களும் கிடைத்துள்ளதாக மீனவர்கள் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் 14 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப் பதிவு

பொய்களைப் பரப்புவோரை நிராகரியுங்கள்: சோனியா காந்தி

'அக்னிபத்' திட்டத்தை நீக்குவோம்: ராகுல் காந்தி

பறவைகள் பூங்கா கட்டுமானப் பணிகள் தீவிரம்

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 43 பதக்கம்

SCROLL FOR NEXT