மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி நன்றிக் கடிதம்
தமிழகத்தில்; எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
தமிழகத்தின் மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாக தமிழக முதல்வர் பழனிசாமி புதனன்று அறிவித்தார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு சுமார் 3 ஆண்டுகள் ஆகும் நிலையில், இன்றுதான் இடம் தேர்வு செய்யப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார்.
அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக மதுரை தேர்வு செய்யப்பட்டதற்கு உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
தனிப்பட்ட முறையில் மட்டும் அல்லாது தமிழக மக்களின் சார்பாகவும் எனது நன்றியினைத் தெரிவித்து கொள்கிறேன்.
தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான எல்லா வித உதவிகளையும் தமிழக அரசு செய்து கொடுக்கும்
இவ்வாறு அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.