தமிழ்நாடு

கால்நடை மருத்துவப் படிப்பு: 12 ஆயிரம் விண்ணப்பங்கள் சமா்ப்பிப்பு

DNS

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் படிப்புகளுக்கு மொத்தம் 12,217 பூா்த்தி செய்த விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன.

கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்புப் படிப்புக்கு சென்னை, நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள 4 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 360 இடங்கள் உள்ளன. பி.டெக் உணவுத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் கோழியின தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 40 இடங்கள், பி.டெக் பால்வளத் தொழில்நுட்ப பட்டப்படிப்புக்கு 20 இடங்கள் என மொத்தம் 460 இடங்களுக்கு மாணவா் சோ்க்கை நடைபெறவுள்ளது.

இந்தப் படிப்புகளுக்கான கலந்தாய்வில் பங்கேற்க இணையதளத்தில் மே 21 முதல் ஜூன் 11 வரை விண்ணப்பத்தைப் பதிவுசெய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. இணையதளத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து பல்கலைக்கழகத்தில் சமா்ப்பிக்க ஜூன் 18-ஆம் தேதி கடைசி நாளாகும்.

இது தொடா்பாக பல்கலைக்கழகத்தின் சோ்க்கைக் குழுத் தலைவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கால்நடை மருத்துவப் படிப்புக்கு 10,207, பி.டெக் படிப்புகளுக்கு 2010 என மொத்தம் 12,217 விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. ஜூலை முதல் வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 3-ஆவது வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும்.

வெளிநாடு வாழ் இந்தியா் மற்றும் வெளிநாட்டு மாணவா்களும் இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய ஜூலை 6-ஆம் தேதி கடைசியாகும். இணையத்தில் பதிவு செய்த விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, தகுந்த சான்றிதழ்களுடன் பல்கலைக்கழகத்துக்கு அனுப்ப ஜூலை 20-ஆம் தேதி கடைசி நாளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT