தமிழ்நாடு

கூடலூர் அருகே வனப் பகுதியில் ஆண் புலி சாவு

DIN

நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள பாடந்தொரை வனப் பகுதியில் ஆண் புலி இறந்து கிடந்தது வியாழக்கிழமை தெரியவந்தது.
கூடலூர் வனக் கோட்டத்திலுள்ள கூடலூர் வனச் சரகம் பாடந்தொரை கடசனக்கொல்லி வனத்தில் புலி இறந்து கிடப்பதை வேட்டைத் தடுப்புக் காவலர்கள் பார்த்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். 
இதைத் தொடர்ந்து, மாவட்ட வன அலுவலர் ராகுல் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு செய்தார். வனப் பகுதியில் கனமழை பெய்து வருவதாலும், புலி இறந்து கிடந்த வனப் பகுதியில் யானைகள் முகாமிட்டிருந்ததாலும், புலியின் சடலத்தைக் கொண்டு வருவதில் இடையூறு ஏற்பட்டது.
யானைகள் அந்த இடத்தை விட்டு வேறு பகுதிக்குச் சென்றவுடன் புலியின் உடலை வனத் துறை வாகனத்தில் ஏற்றி கூடலூர் ஈட்டிமூலா வனத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். இரவு நேரமாகி விட்டதால் புலியின் உடலை பனிக் கட்டிகளால் பதப்படுத்தி வைக்கும் நடவடிக்கையில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
வெள்ளிக்கிழமை காலை புலியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்படும் என்றும், இறந்த ஆண் புலிக்கு சுமார் 10 வயதிருக்கும் என்றும் வனச் சரக அலுவலர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

SCROLL FOR NEXT