தமிழ்நாடு

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராடிய 1,700 பேர் மீதான வழக்கு ரத்து

DIN


மதுரை: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 1,700 பேர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து கடந்த 18ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத் தலைமையிலான கூட்டத்தில், அனுமதிக்கப்பட்டதை விட, அதிக அளவில் மக்கள் கூடியதால், சுமார் 1,700 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

பொதுமக்கள் மீது தொடரப்பட்ட வழக்கை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த மதுரைக் கிளை நீதிமன்றம், 1,700 பேர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT