மண்டைக்காடு: இப்படி ஆகி விட்டதே திமுக என்று அனைவரும் வருத்தப்படும் நிலைமையில்தான் திமுக இருக்கிறது என்று மத்திய அமைச்சர் பொன்னார் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காட்டில் வெள்ளியன்று நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் வருகை தந்திருந்தார்.அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
அதிக அளவு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு எதிர்க்கட்சியாக திமுகவின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. சட்டப்பேரவையைப் பொறுத்தவரை எதிர்கட்சித் தலைவர் வருவார்..பேசுவார்..வெளிநடப்பு செய்து விடுவார் என்றுதான் கூறுமாறு நிலைமை உள்ளது.
இப்படி ஆகி விட்டதே திமுக என்று அனைவரும் வருத்தப்படும் நிலைமையில்தான் திமுக தற்பொழுது இருக்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.