தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமிலம் வெளியேற்றும் பணி நிறைவு

கீதா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலம் வெளியேற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. மேலும், ஆலைக்குள் உள்ள கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் உள்ள கழிவுகளை அகற்றுவது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சீல் வைக்கப்பட்ட நிலையில், அங்குள்ள கந்தக அமில சேமிப்புக் கிடங்கில் இருந்து கடந்த 17 -ஆம் தேதி கசிவு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
 இதையடுத்து, சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், கசிவை சரிசெய்யும் பணியிலும், கந்தக அமிலத்தை வெளியேற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.
 கடந்த 18 -ஆம் தேதி முதல் சிறப்பு டேங்கர் லாரிகள் மூலம் கந்தக அமிலம் வெளியேற்றப்பட்டு கோவை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்தப் பணிகள் 7 -ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலையுடன் நிறைவு பெற்றது.
 இதுவரை 94 டேங்கர் லாரிகள் மூலம் 2,124.78 மெட்ரிக் டன் கந்தக அமிலம் வெளியே கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், கந்தக அமில சேமிப்புக் கிடங்கின் அடிப்பகுதியில் கழிவுகள் அதிக அளவு இருப்பதால் அவற்றை பம்ப்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், கழிவுகளை அகற்றுவது தொடர்பாக உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT