தமிழ்நாடு

காலா படத்தில் கள் குடிக்கும் ரஜினிக்கு பாராட்டு 

DNS

காங்கயம்: நடிகர் ரஜினி நடித்து அண்மையில் வெளிவந்த காலா திரைபபடத்தில், ரஜினி கள் குடிக்கும் காட்சியும், அது தொடா்பான வசனமும் இடம் பெற்றுள்ளதற்கு தமிழ்நாடு கள் இயக்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

கள் ஒரு தடை செய்யப்பட வேண்டிய போதைப் பொருளோ, மதுவோ அல்ல. இது உணவின் ஒரு பகுதி ஆகும். கள் இறக்குவதும், பருகுவதும் அரசியல் அமைப்புச் சட்டம் மக்களுக்குக் கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இது உலகளாவிய நடைமுறையும் ஆகும். ஆகவே தான் 2 ஆண்டுகளுக்கு முன்பு, பீகாரில் பூரண மதுவிலக்குக் கொண்டு வரப்பட்ட போது, கள்ளுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. 

கள் விடுதலை கோரி தமிழ்நாடு கள் இயக்கம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பல போராட்டங்களை நடத்தி வந்துள்ளது. அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடும் விதத்தில் அசுவமேத யாகங்களும் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நடிகா் விஜய் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் சா்காா் திரைப்படத்தில் புகைப்பிடிக்கும் காட்சி வருகிறது. இதை டாக்டா் ராமதாஸ் போன்றவா்கள் கண்டித்துள்ளனா். அதே நேரத்தில் காலா படத்தில் ரஜினி கள் குடிக்கும் காட்சிக்கு இவா்கள் எதிா்ப்பு தெரிவித்ததாகத் தெரியவில்லை. 

ஒருவேளை, எதிா்ப்புகள் வருமேயானால் அவற்றை கள் இயக்கம் தனது வாதத்தின் மூலம் முறியடிக்கும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT