தமிழ்நாடு

மருத்துவமனைகளிலும் மறுவாழ்வு மையம்: தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

DIN

மது அருந்துபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையம் அமைப்பது குறித்து பரிசீலித்து 8 வாரத்தில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

மதுரை உயர்நீதிமன்றத்தில் மது அருந்துபவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் மறுவாழ்வு மையம் அமைக்க ராம்குமார் ஆதித்யா என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சி.டி.செல்வம் மற்றும் பஷீர் அகமது அமர்வு முன்பு இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசு மருத்துவமனைகளிலும் மதுவால் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு மையம் அமைப்பது, அதற்கான மருத்துவர்களையும் நியமிப்பது குறித்தும் பரிசீலித்து 8 வார காலத்தில் பதிலளிக்குமாறு சுகாதார துறைக்கு உத்தரவிட்டனர். 

வழக்கு விபரம்:

திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்யா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், "கடந்த 2 ஆண்டில் மாதத்துக்கு 75 பேர் மதுவுக்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். 1,000 கடைகளுக்கு மேல் மூடப்பட்ட போதும் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் இருக்கிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டும் தான் தற்போது மறுவாழ்வு மையங்கள் செயல்பட்டு வருகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஹேந்திரா மின்சார கார்களுக்கு ரூ.1.55 லட்சம் வரை சிறப்பு சலுகை!

சென்னைக்கு 700 கி.மீ. தொலைவில் டித்வா புயல்! வானிலை மையம்

நிழல் ஓவியம்... பூனம் பாஜ்வா!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் 1 லட்சம் பேர்?

பயங்கரவாதத் தொடர்பு? ஜம்முவில் 19 வயது நபர் கைது

SCROLL FOR NEXT