துறைத் தலைவர் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடுதுறைத் தலைவர் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு: மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்
சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் துறைத் தலைவர் மீது பல்வேறு புகார்களைத் தெரிவித்து மாணவர்கள் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைக்கழக நிர்வாகத்திடம் இதுதொடர்பாக ஏற்கெனவே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தெரிவித்தனர். சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறைத் தலைவர், இரண்டாம் ஆண்டுக்குரிய பாடங்களை சரிவர நடத்துவதில்லை, வகுப்பை ஒரு நாள்கூட குறிப்பிட்ட நேரத்தில் தொடங்குவதில்லை, சில நேரங்களில் வகுப்புக்கே வருவதில்லை என கடந்த ஜன. 31-ஆம் தேதி துணைவேந்தரிடம் புகார் மனுவில் மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், தேர்வுத் தாளைத் திருத்தாமலே, மதிப்பெண் போடுவதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருப்பதாகவும் புகார் மனுவில் மாணவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்தப் புகார் மீது பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததைத் தொடர்ந்து, இதழியல் துறையைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் வியாழக்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.