மாணவர்களின் கல்வி மேம்பாட்டு நிதி: விஜயகாந்த் வலியுறுத்தல்
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதியைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கான மத்திய அரசின் நிதியைப் பெற தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 1,765.62 கோடி மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்கு ரூ. 31.02 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என வழக்குரைஞர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதில் தமிழகத்துக்கு மட்டும் ரூ. 1,547.56 கோடி நிலுவைத் தொகை உள்ளது.
இதுகுறித்து ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப்பட்ட நிலையிலும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வழங்கப்படவில்லை. எனவே, மத்திய அரசிடமிருந்து இந்த நிதியைப் பெற தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.