முகப்பு
தமிழ்நாடு

வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிட முதல்வர் உத்தரவு

வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:22 PM
பகிர்:

வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 5ஆம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்குக் கோரிக்கைகள் வந்துள்ளன. 

வேளாண் பெருங்குடி மக்களின் வேண்டுகோளினை ஏற்று, ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், வரட்டுப்பள்ளம் நீர்த்தேக்கத்திலிருந்து புதிய ஆயக்கட்டு பகுதிகளுக்கு விநாடிக்கு 90.72 மி. கன. அடி மிகாமல் 5.3.2018 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டத்திலுள்ள 2924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

முழு கட்டுரையைப் படிக்க →